தமிழ்நாடு

1414 பத்திரிகையாளர்களின் குடும்பங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்க அரசாணை!

Published

on

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிக்கையாளரின் குடும்பங்களை வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக அரசில் பத்திரிகையாளர்களுக்கு பெறும் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக முதல்வர் பதவியை ஏற்ற ஒரு சில நாட்களிலேயே பத்திரிகையாளர்கள் முன்கள பணியாளர்களாக பணியாற்றுவார்கள் என முதல்வர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பத்திரிக்கையாளர்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக எழுப்பப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1400 பத்திரிக்கையாளரின் குடும்பங்களை வருமான வரி உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்க அரசாணை வெளியிட்டு உள்ளார்.

இந்த அரசாணை பத்திரிகையாளர்களுக்கு பெருமகிழ்ச்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செய்தி துறையால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version