இந்தியா

தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்கள் பெட்ரோல் வரியை குறைக்கவில்லை: மத்திய அரசு

Published

on

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது என்பதும் இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 11 ரூபாய் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் டீசல் விலை 100 ரூபாய்க்குள் குறைந்தது என்பதும் பெட்ரோல் விலை 101 ரூபாயாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் இன்றும் சென்னையில் பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்ததால் பல மாநிலங்கள் தங்களுடைய மாநில அரசு மதிப்பு கூட்டு வரியை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 14 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கலால் வரியை மத்திய அரசு கணிசமாக குறைந்துள்ளது. இதனை அடுத்து 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலால் வரியை குறைத்துள்ளது. கர்நாடகா புதுவையில் பெட்ரோல் விலை அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் விலை அதிகபட்சமாக 20 ரூபாய் வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்காளம், உள்பட 14 மையங்களில் வாட் வரி குறைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்காத மாநிலங்கள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஆட்சிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version