இந்தியா

ராகுல் சிறை தண்டனை எதிரொலி: பாஜக மீது புகார் உடன் உச்ச நீதிமன்றத்தை நாடிய 14 எதிர்க்கட்சிகள்!

Published

on

பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. விசாரணை அமைப்புகளை ஆளும் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏவப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

#image_title

மணீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவின் மகள் கவிதா, லாலு பிரசாத் யாதவின் குடும்பம் என பல எதிர்க்கட்சியினர் மத்திய விசாரணை அமைப்பின் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது ராகுல் காந்தி மீதும் பாஜக கடுமையை காட்டி வருகிறது.

இந்நிலையில் ஆளும் பாஜக அரசு விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை தவறாகப் பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சியினர் மேல் குறிவைத்து ஏவப்படுவதாகவும் குற்றம் சாட்டி 14 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

மேலும், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் இல்லம் வரை ஊர்வலமாக சென்று குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version