தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்: இன்றும் 14 மீனவர்கள் கைது!

Published

on

தமிழக மீனவர்கள் 55 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது என்பதும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாறினாலும் மீனவர்களின் கைது நடவடிக்கை மட்டும் தொடர்ந்து வருகிறது என்பதும் இதற்கு மத்திய மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக மீனவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தை சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். தமிழக எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே 55 தமிழக மீனவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version