தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு நிறைவு.. 14 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.. முழு விவரம்!

Published

on

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு அதில் தமிழகத்திலிருந்து 446 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றனர். அதில் 14 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.

மொத்தம் உள்ள 1,50,000 சீட்டுகளில் 93,571 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 60,707 சீட்டுகள் காலியாக உள்ளன.

சென்ற ஆண்டு 88,596 சீட்டுகள் மட்டுமே நிரப்பப்பட்டது.

மேலும் 12 கல்லூரிகளில் மட்டுமே 100% சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. 66 கல்லூரிகளில் 90 சதவிகித சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version