தமிழ்நாடு

14 நாட்கள் விடுமுறை: தமிழக அரசின் அரசாணை!

Published

on

தமிழக அரசு ஊழியர்கள் 14 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை மறுக்கப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவி பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தது என்பதும் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இயங்காத நிலையில் ரேஷன் கடை, காவல்துறை, மருத்துவத்துறை போன்ற ஒருசில அரசுத்துறை மட்டும் இயங்கிவந்தன என்பதும், அந்த துறையில் உள்ள ஊழியர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாது பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் என்பதும் காவல்துறையினர் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இரவு பகலாக பணி புரிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரேனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட அரசு ஊழியர்கள் 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version