தமிழ்நாடு

சென்னை வந்தனர் 1300 துணை ராணுவப்படையினர்: தேர்தல் பாதுகாப்புக்கு ஏற்பாடு!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தீவிரமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் பிரச்சாரத்தையும் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1300 துணை ராணுவ படையினர் சற்று முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அகர்தாவில் இருந்து 18 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலில் இன்று காலை ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் சென்னை சென்ட்ரல் வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் அனுப்பப்படுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

seithichurul

Trending

Exit mobile version