தமிழ்நாடு

12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் அதேபோல் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டில் 10, 12 வகுப்புகளுக்கான மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும், சமீபத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. அதேபோல் விரைவில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிப்பெண் பட்டியல் விரைவில் வழங்கப்பட உள்ளன

இந்த நிலையில் பள்ளி மாணவர்களைப் போலவே தனித்தேர்வர்களுக்கு ஆல்பாஸ் என அறிவிக்க வேண்டுமென பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனித் தேர்வுகளுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கப்படாது என்றும் பள்ளிகல்வித்துறை உறுதிபடக் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தனித் தேர்வு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இந்த தேர்வு எழுத விரும்பும் 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் இன்று முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது

இதனை அடுத்து தனித்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Trending

Exit mobile version