உலகம்

129 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 மாத குழந்தை: துருக்கி பூகம்பத்தில் ஒரு அதிசயம்..!

Published

on

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 25000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் 70,000 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பதும், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்டு 129 மணி நேரம் கழித்து இரண்டு மாத குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட ஆச்சரியமான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் இடிபாடுகளுக்கு இடையே இருக்கும் பொது மக்களை மீட்க இந்திய தேசிய பேரிடர் மீட்புப்படை உள்பட பல நாட்டு மீட்டுப் படையினர் முயன்று வருகின்றனர்.

அந்த வகையில் இரண்டு மாத குழந்தை ஒன்று 129 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்த குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது குழந்தையின் உடல் சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மாத குழந்தை கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் உணவு இன்றி எப்படி உயிருடன் இருந்தது என்பதை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எல்லாம் கடவுளின் அருள் தான் என்றும் அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

நிலநடுக்கதிற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் பிறகு இரண்டு மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அந்த பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி அதே பகுதியில் இரண்டு வயது சிறுமி, ஆறு மாத கர்ப்பிணி பெண் மற்றும் 70 வயது உடைய பெண் ஒருவரும் ஐந்து நாட்களுக்குப் பிறகு ஈடுபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இடிபாடுகளிலிருந்து சிரியா நாட்டில் காப்பாற்றப்பட்டதாகவும் 5 பேர்களும் ஐந்து நாட்கள் இடுப்பாடுகளுக்கு இடையே இருந்த நிலையில் முழு குடும்பமும் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் மூன்று குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் நம்பிக்கையுடன் இன்னும் ஏராளமானவர்களை உயிருடன் மீட்கலாம் என மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version