உலகம்

ஒரு சடலம்.. சுற்றி 124 பாம்புகள்.. அதிர்ச்சியில் காவல் துறையினர்!

Published

on

அமெரிக்கா மேரிலாண்டில், 49 வயது நபர் ஒருவரின் சடலத்தைச் சுற்றி 124 பாம்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மேரிலாண்டில், 49 வயது நபர் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார் என தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

snake

அங்கு இறந்த உடலைச் சுற்றி ஏகப்பட்ட பாம்புகள் இருந்துள்ளன. கிட்டத்தட்ட 124 பாம்புகள் இருந்து இருக்கலாம். அவற்றில் பல நச்சு வாய்தந்ததாகவும், சில நச்சு இல்லாததாகவும் இருந்தன என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் பாம்புகள் குறித்து அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

காவல் துறையினர் இது கொலையா இல்லை வேறு ஏதேனும் காரணங்களா என விசாரித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version