தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள்: பொதுப்பணித்துறை ஏற்பாடு

Published

on

தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை எண்ணிக்கை காலியாகி கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் படுக்கைகளின் எண்ணிக்கை வேகமாக நிரம்பி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து வெளியான அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில்‌ உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும்‌ கடந்த ஆண்டு 2,912 ஆக்‌சிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌ செய்யப்பட்டது. இத்துடன்‌ கூடுதலாக இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது.

சென்னையைப்‌ பொறுத்தவரை கூடுதல்‌ ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌, ராஜீவ்‌ காந்தி அரசு பொது மருத்துவமனையில்‌ 550, அரசு ஸ்டான்லி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ 500, அரசு பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மருத்துவமனை எழும்பூரில்‌ 225, கிங்ஸ்‌ இன்ஸ்டிடியூட்‌ கிண்டியில்‌ 200 மற்றும்‌ சென்னையில்‌ உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில்‌ 1420 கூடுதல்‌ ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ கூடுதலாக 434 ஆக்சிஜன்‌ படுக்கை வசதிகளும்‌, திருச்சி மாவட்டத்தில்‌ 585, தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ 583, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 31, மதுரை மாவட்டத்தில்‌ 225 மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ 925 மற்றும்‌ பிற மாவட்டங்களில்‌ கூடுதலாக 7,012 ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகளும்‌ அமைக்கப்பட்டு வருஇறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ பொதுப்பணித்‌ துறை பொறியாளர்கள்‌ ஆகியோர்‌ நாள்தோறும்‌ கலந்து ஆலோசித்து இரண்டாம் ‌அலையை எதிர்கொள்ள மருத்துவத்துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும்‌ பொதுப்பணித்துறை தீவிரமாகவும்‌ துரிதமாகவும்‌ செய்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version