தமிழ்நாடு

ரூ.15 ஆயிரம் சம்பளம் ரூ.40 ஆயிரம் ஆகிறது: ஒப்பந்த நர்ஸ்களுக்கு பணி நிரந்தரம்

Published

on

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் என தற்போது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் எம்ஆர்பி மூலமாக தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருந்த 1212 பேருக்கு தற்போது பணி நிரந்தரம் செய்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் நர்ஸ்களாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை அதிகரித்து வருவதல் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார்கள் அவர்களது பணி என அறிவிக்கப்படுள்ளது.

இவர்களது ஒப்பந்தம் வரும் ஐந்தாம் தேதி உடன் முடிவடையவுள்ளதை அடுத்து புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஒப்பந்த அடிப்படையில் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய நர்ஸ்கள் அனைவரும் இனி ரூ.40 ஆயிரம் சம்பளம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version