தமிழ்நாடு

+1,+2  தேர்வு நேரம் மாற்றம் 

Published

on

+1,+2  தேர்வு நேரம் மாற்றம் 
+1,+2 தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது . கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனினும் திட்டமிட்டபடியே +1,+2 தேர்வு நடக்குமெனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமண்டத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.பேருந்து ,ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து தடை  செய்யப்பட்ட இந்த நேரத்தில் தேர்வுக்கு மாணவர்கள் வருவது சிரமமாகவுள்ளது ,அதனால் நேரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேரத்தை மாற்றியமைக்க உத்தரவிட்டனர்.அதை ஏற்றுக் கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் ,நேரத்தை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.30 நிமிடங்கள் தாமதமாக 10.30க்கு தேர்வுகள் தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
seithichurul

Trending

Exit mobile version