தமிழ்நாடு

காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில் பதிவான வாக்குசதவிகிதம் எவ்வளவு?

Published

on

தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கோடைகாலம் என்பதால் வெயில் வரும்முன்னே வாக்கு பதிவு செய்ய வேண்டும் என இன்று காலை 6 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் 7 மணிமுதல் வாக்களித்தனர்

திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் வாக்களித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இரண்டு மணி நேரத்தில் அதாவது 9 மணிக்கு 13.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது குறிப்பாக சென்னையில் 10.58 சதவீதமும் வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் காலை 9 மணிக்கு 20 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கிருஷ்ணகிரியில் 13.3 8% வாக்குகளும், திருவள்ளூரில் 12.98% வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 14.80% வாக்குகளும், வேலூரில் 12.74% வாக்குகளும், பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version