இந்தியா

11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்ட அனுமதித்த டிரைவர் மீது நடவடிக்கை!

Published

on

11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்ட அனுமதித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் என்ற பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தான் பஸ் ஓட்ட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததை அடுத்து அந்த பஸ்சின் டிரைவர் மாணவியை டிரைவர் சீட்டில் உட்கார வைத்து எப்படி ஓட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மலைப்பாதையில் பஸ் ஓட்ட தெரியாத மாணவி ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி இருந்தால் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

இதனை அடுத்து அந்த மாவட்ட நிர்வாகம் பஸ் டிரைவருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவரது லைசென்ஸை ரத்து செய்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version