தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 11 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: லாக்டவுன் உறுதியா?

Published

on

தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருமே ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் 11 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் தமிழகம், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இவற்றில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 34 பேர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஒமிக்ரான் அரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் சென்னை மருத்துவமனையிலும் நான்கு பேர் பிற மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மொத்தம் தமிழகத்தில் 45 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களை அடுத்து தமிழ்நாடு 7வது மாநிலமாகக் ஒமிக்ரான் பாதிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒமிக்ரான் அதிகமாகி வருவதால் இரவுநேர லாக்டவுன் உறுதி என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version