இந்தியா

கொரோனாவை ஒழிக்க 11 லிட்டர் பாலாபிஷேகம் செய்த உபி முதல்வர்: நெட்டிசன்கள் கிண்டல்

Published

on

கொரோனா வைரஸை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் விஞ்ஞான மூலம் போராடி வரும் நிலையில் சிவனுக்கு 11 லிட்டர் பாலாபிஷேகம் செய்த உபி முதல்வரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் நேற்று தனது வீட்டில் ருத்ராபிஷேகம் பூஜை நடத்தினார். கொரோனா வைரஸை விரட்ட நடந்த பூஜையில் சிவனுக்கு 11 லிட்டர் பாலாபிஷேகம் நடத்தியதாகவும் அப்போது வேத மந்திரங்களை பண்டிதர்கள் ஓதியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பாலாபிஷேகம் மட்டுமின்றி அருகம்புல் 5 லிட்டர் அளவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் விநாயகர் உள்பட பல கடவுள்களுக்கு இந்த அபிஷேகம் நடந்ததாகவும் இந்த பூஜைக்கு ராமானுஜம் திரிபாதி என்ற பண்டிதர் தலைமை வகித்துதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவை விரட்ட இந்த பூஜை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நெட்டிசன்கள் இவற்றை கிண்டலடித்து வருகின்றனர். தடுப்பூசி உள்பட பல மருந்து பொருட்கள் மூலம் கொரோனாவை விரட்ட உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சிவனுக்கு பால் அபிஷேகம் நடத்தி கொரோனாவை விரட்டும் முதல்வர் எங்களுக்கு தேவையில்லை என்று உபி மாநிலத்தைச் சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version