இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் அவர்கள் சற்று முன் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 17% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக்சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார். மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசு ஊழியர்களை அடுத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version