இந்தியா

வாக்காளர் அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா? இதோ விளக்கம்

Published

on

நாளை தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வேறு சில ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் கீழ்கண்ட 11 ஆவணங்களில் ஒன்றை அடையாள ஆவணமாக எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

1.ஆதார் ஆட்டை

2.பான் கார்ட்

3.ஓட்டுநர் உரிமம்

4.பாஸ்போர்ட்

5.புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்

6.வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்

7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை

8.அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்

9.தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்ட்

10.மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட் (Smart card issued by RGI under NPR)

11.எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள்

seithichurul

Trending

Exit mobile version