தமிழ்நாடு

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

Published

on

10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகளை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறித்த அறிவிப்பை அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வை எழுதும் தனித்தேர்வர்களுக்கு டிசம்பர் 26 முதல் மாவட்ட வாரியாக அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நாளை தான் கடைசி தினம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று மற்றும் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நாளை மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி முறையில் அதாவது தக்கல் முறையில் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை கூடுதல் கட்டணம் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு கூடுதலாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை சேவை மையங்களில் தனி தேர்வர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டிய தகவல்களை https://www.dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Trending

Exit mobile version