தமிழ்நாடு

கல்லூரி மாணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த 10ஆம் வகுப்பு மாணவிகள்: அதிர்ச்சி காரணம்!

Published

on

கல்லூரி மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆந்திர எல்லையான பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் ரத்தக் கறையுடன் ஒரு இளைஞரின் சடலம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இது குறித்து போலீசார் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் பிரேம் குமார் என்றும் அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை பற்றி மேலும் விசாரித்தபோது பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுடன் பழகி உள்ளார் என்பதும் மாணவிகளுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார் என்றும் தெரிகிறது. அப்போது பிரேம்குமார் அந்த மாணவிகளை வீடியோ எடுத்ததாகவும் அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

மாணவிகள் மிரட்டலுக்கு அஞ்சி ஒன்றரை லட்ச ரூபாயை கொடுத்ததாகவும், ஒரு கட்டத்திற்கு மேல் பணம் கொடுக்க மனமின்றி மாணவனை கொலை செய்ய தங்களது நண்பர் ஒருவரின் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

மாணவிகள் அனுப்பிய கூலிப்படையினர் பிரேம்குமாரை இரண்டு நாட்கள் சித்தரவதை செய்து மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து அங்கிருந்த குப்பைமேட்டில் பிணத்தை போட்டு விட்டு தப்பி வந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் போலீசார் தற்போது கூலிப்படையை ஏவிய பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவன் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version