தமிழ்நாடு

12ஆம் வகுப்பை அடுத்து 10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு அதே தேதியில் அதாவது ஏப்ரல் 25 முதல் மே 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தி அதற்கான மதிப்பெண்களை அனுப்பி வைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version