தமிழ்நாடு

10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது என்பதும் இந்த மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள் தேர்வுகள் எழுதி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பை அடுத்து தற்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை முதலே www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை பதிவு செய்து வருகின்றனர். இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் சென்று மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களை வைத்து மாணவர்கள் பதினோராம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version