தமிழ்நாடு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு, ஆனால் கட்டாயமில்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published

on

கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பதும் அனைவரும் பாஸ் என்றாலும் அதிக மதிப்பெண் தேவை என விருப்பமுள்ள மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என அறிவித்துள்ளது.

11ஆம் வகுப்பு சேர்வதற்கு கண்டிப்பாக 10ஆம் வகுப்பு மதிப்பெண் தேவை என்பதால் அதிக மதிப்பெண்கள் தேவை என்ற கனவில் இருக்கும் மாணவர்கள், 11ஆம் வகுப்பில் நல்ல குரூப் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் 10ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதலாம் என்றும் அதில் அதிக மதிப்பெண் பெற்றால் அந்த மதிப்பெண் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவர்களுக்கு 35 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சி என்பது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிக மதிப்பெண்கள் பெற விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்வை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வு எழுத முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version