தமிழ்நாடு

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

Published

on

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ள நிலையில் சற்று முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு குறித்த அட்டவணையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல் கட்ட தேர்தல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9 முதல் 16ஆம் தேதி வரை முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு துறை வெளியிட்டுள்ள திருப்புதல் தேர்வு குறித்த முழு விவரங்கள் இதோ:

 

seithichurul

Trending

Exit mobile version