தமிழ்நாடு

10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்துவதற்கு புதிய நடைமுறை

Published

on

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டது என்பதும் 10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 10, 12 வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்துவதற்கு புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 10, 12 வகுப்புகளுக்கான விடைத்தாள்களை அதே பள்ளியில் வைத்து திருத்தக் கூடாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

மேலும் வரும் 19ஆம் தேதி 10, 12 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தேர்வுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version