தமிழ்நாடு

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25ல் தொடங்குகிறது என்றும் பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

10ஆம் வகுப்புக்கு மே 6ஆம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12ஆம் வகுப்புக்கு மேல் 5 இல் தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் 10, 11, 12ம் வகுப்பு தேர்வில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்றும். 10ஆம் வகுப்பு தேர்வை மட்டும் 9 லட்சம் பேரும், 11ஆம் வகுப்பு தேர்வை மட்டும் 8.49 லட்சம் பேரும் 12ஆம் வகுப்பு தேர்வை மட்டும் 8.36 லட்சம் பேர் எழுத உள்ளனர் என்று அறிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் மனநிறைவோடு தேர்வு எழுத வேண்டும் என்றும் பொதுத் தேர்வு கால அட்டவணை http://tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் அதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version