தமிழ்நாடு

தமிழகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 108 அடி உயர அனுமன் சிலை!

Published

on

100 கோடி ரூபாய் செலவில் 108 அடியில் அனுமன் சிலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்று ராமேஸ்வரம் என்றும் இங்கு உள்ள ராமநாத சுவாமி திருக்கோயில் நாடு முழுவதும் புகழ் பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் நூறு கோடி செலவில் 108 அடி அனுமன் சிலை அமைக்க தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர்கள் நந்தா என்பவர் நடத்தி வரும் ஜென்சி நந்தா என்ற அறக்கட்டளையின் சார்பாக இந்தியாவின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அசாம் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 108 அடி சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தெற்கே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இந்த அறக்கட்டளையின் சார்பாக அனுமன் சிலை அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றதாகவும் இதில் தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிலை குறித்து ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் கூறியபோது ’ராமரின் பாதம் பட்ட இடம் ராமேஸ்வரம் என்பதால் இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தலமாக கருதப்படுகிறது. ராமேஸ்வரம் கடற்கரையில் 108 சிலை அமைக்கவுள்ளது. நூறு கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த சிலை இரண்டு வருடங்களில் முடிக்கப்படும் என்றும் அடுத்த கட்டமாக குஜராத் மாநிலத்தில் இதே போன்ற சிலை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் பயணிகள் அனைவரும் இந்த அனுமன் சிலையை வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதே அறக்கட்டளையின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version