தமிழ்நாடு

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்?

Published

on

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் 10,11, 12ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதும் தனித்தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16. மேலும் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.

10,11, 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version