உலகம்

10,000 ஏக்கரில் கஞ்சா தோட்டம்.. ஆந்திராவை சோதனை.. டிரோன் மூலம் கண்டுபிடிப்பு!

Published

on

ஹைதராபாத்: ஆந்திராவில் செயல்பட்டு வரும் கஞ்சா தயாரிப்பு பகுதிகளை எல்லாம் மொத்தமாக அழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இந்தியாவிலேயே ஆந்திராவில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது.அதுவும் விசாகப்பட்டினத்தில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. அங்குள்ள படேறு பகுதியை இந்தியாவின் கஞ்சா தலைநகர் என்று அழைக்கிறார்கள்.

விசாகப்பட்டினம் அருகே இருக்கும் பகுதிகளான படேறு, ஹகும்பேட்டா, மான்சிகிபட்டு, மண்டல்லோ ஆகிய பகுதிகள்தான் அதிக அளவில் கஞ்சாவை பயிரிடுகிறது.

இங்கு 1000 கிராமங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது. ஒரு கிராமத்தில் இருந்து மட்டும் குறைந்தது 1000 கிலோ கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. பல்லாயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் எங்கு, எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்று விவரம் தெரியாமல் இருந்தது. ஒரு பெரிய கேங்தான் இந்த போதை வியாபார உலகத்தை கட்டுப்படுத்துகிறது என்று போதை தடுப்பு பிரிவிற்கும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு மாதம் முன் இதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

 

Trending

Exit mobile version