இந்தியா

கும்பமேளா விழாவில் குவிந்த பக்தர்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

Published

on

இந்துக்களின் புனித நிகழ்ச்சியான கும்பமேளா திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்துள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஹரித்துவாரில் கும்பமேளா பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாதுக்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வீசி வரும் நிலையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல், மாஸ்க் அணியாமல் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு இருப்பதால் கொரோனாவுக்கும் கொண்டாட்டம் ஆகியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கும்பமேளாவில் கலந்து கொண்ட பக்தர்களில் எடுக்கப்பட்ட 50 ஆயிரம் பேர்களில் நேற்று முன்தினம் 408 பேர்களுக்கும் நேற்று 594 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version