தமிழ்நாடு

அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 91 செ.மீ மழை பெய்து சாதனை!

Published

on

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேர்த்தில் 91 செண்டி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. நூறு ஆண்டுகளில் இல்லாத மழை தற்போது பெய்துள்ளதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாத கனமை பெய்து வருகிறது. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பலர் தங்கள் வீடுகளை இழந்து அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இந்த முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மழைக்கு நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரம் அவலாஞ்சியில் பெய்த கனமழை புதிய வரலாறை படைத்துள்ளது. ஒரே நாளில் அவலாஞ்சியில் 91 செ.மீ மழை பெய்து அதிகபட்ச மழை அளவாக சாதனை புரிந்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே 24 மணிநேரமும் ஈரப்பதமான நிகழ்வு உருவாகியது இதுதான் முதல் முறையாகும். இந்நிலையில் அவலாஞ்சியில் தொடர்ந்து மழை பெய்து அதன் மழை அளவு அதிகரித்து வருவதால் பாதிப்புகள் மேலும் அதிகமாகும் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version