வணிகம்

இரண்டு மாதத்தில் மீண்டும் 100% ரயில் சேவைகள் தொடக்கம்!

Published

on

இரண்டு மாதத்திற்கு பிறகு ரயில் சேவைகள் மீண்டும் இயல்வு நிலைக்குத் திரும்பும் என்று பூமி டுடே தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது மார்ச் மாதம் 4-ம் வாரம் முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பச் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

அதன் பிறகு படிப்படியாக ரயில் சேவைகள் ஓர் அளவிற்குத் தொடங்கப்பட்டாலும், புறநகர் ரயில் சேவைகளை தவிர பிற ரயில்களில் பெரும்பாலும் ரிசர்வ் செய்து மட்டுமே பயணிக்க முடியும்.

தற்போது 60 சதவீத ரயில்கள் இயக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நமக்குக் கிடைத்த தகவலின் படி இரண்டு மாதத்தில் ரயில் சேவைகள் மீண்டும் 100 சதவீத பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அது மாநில அரசுகள் எடுக்கும் முடிவை பொறுத்துத்தான் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மறுபக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் முழுவீச்சாக நடைபெற்று வருகிறது.

ஆனால், ரயில் சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற தகவல் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version