தமிழ்நாடு

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களில் இன்று 100 டிகிரியை தாண்டும்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஏற்கனவே 10 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து சதமடித்து உள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி உள்ள நிலையில் இன்றும் 10 மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
அதேபோல் நாளை தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த அச்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு உள்ளது.

இன்றும் நாளையும் தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக பகல் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version