சினிமா செய்திகள்

100 கோடி கிளப்பில் இணைந்த என்ஜிகே!

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படத்திற்கு விமர்சகர்கள் கடும் விமர்சனங்களை வைத்து வந்தாலும், சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால், 100 கோடி கிளப்பில் என்ஜிகே இணைந்துள்ளது.

சூர்யா, சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய என்ஜிகே திரைப்படம், அரசியல் படமாக கடந்த மே 31ம் தேதி வெளியானது. இரு வாரங்கள் கடந்த நிலையில், படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவான என்ஜிகே, சூர்யாவின் 6வது 100 கோடி வசூலித்த படமாகும்.

7ம் அறிவு, சிங்கம் 2, 24, சிங்கம் 3 மற்றும் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய 5 படங்கள் இதற்கு முன்னதாக 100 கோடி கிளப்பில் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version