தமிழ்நாடு

ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: ஓட்டல் உரிமையாளர் கைது!

Published

on

ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி திடீரென உடல் உபாதை காரணமாக உயிரிழந்ததை அடுத்து ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரணியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆனந்த் என்பவர் தனது குடும்பத்துடன் சமீபத்தில் அங்கு உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றனர். அந்த ஓட்டலில் பிரியாணி, தந்தூரி சிக்கன் உள்பட பல வகைகளை ஆர்டர் செய்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டுக்கு வந்ததை அடுத்து ஆனந்த் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் உடல் உபாதை ஏற்பட்டது. இதனை அடுத்து அனைவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஆனந்தின் பத்து வயது மகள் லோஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் ஆனந்த் குடும்பத்தினர் மட்டுமின்றி அதே ஓட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஹோட்டலில் சென்று சிக்கன் மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தியதாகவும், இதனை அடுத்து ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் இது குறித்து காவல்துறையிடம் தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து ஓட்டல் உரிமையாளரை விசாரணை செய்து பின்னர் கைது செய்தனர். அந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாகவும் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இறந்த சிறுமியின் தாயின் உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பிரியாணி மற்றும் சிக்கன் உணவை ஆசையுடன் சாப்பிட்ட 10 வயது சிறுமி பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version