கிரிக்கெட்

10 விக்கெட் எடுத்து உலக சாதனை செய்த வீரர் அணியில் இருந்து நீக்கம்: காரணம் இதுதான்!

Published

on

10 விக்கெட் எடுத்து உலக சாதனை செய்த நியூசிலாந்து அணி வீரரை அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு அணியில் இருந்து நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை சேர்ந்த அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் எடுத்து உலக சாதனை செய்தார். ஏற்கனவே கும்ப்ளே மற்றும் ஜிம் லேக்கர் ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் எடுத்த நிலையில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் அந்த தொடருக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதில் 10 விக்கெட் எடுத்து உலக சாதனை செய்த அஜாஸ் பட்டேல் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறிய போது ’நாங்கள் பந்தயத்திற்கு ஏற்ற குதிரையைத்தான் தேர்ந்தெடுப்போம். நியூசிலாந்து மைதானங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளோம். இருப்பினும் அஜாஸ் பட்டேல் தேர்வு செய்யாதது எனக்கு வருத்தம்தான் என்று கூறியுள்ளார்

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற வீரர்கள் பின்வருமாறு: டாம் லேதம், டாம் பிளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிகலஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சவுதீ, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வில் யங்.

Trending

Exit mobile version