சினிமா

10 தியேட்டர்களுக்குத் திடீர் எனத் தடை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

Published

on

திருட்டு வி.சி.டி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள 9 தியேட்டர்கள் மற்றும் பெங்களூரில் உள்ள 1 தியேட்டர் என மொத்தம் 10 தியேட்டர்களுக்கு இனி எந்தப் படமும் வழங்கப்பட மாட்டாது என அதிரடியாக முடிவெடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம்.

கிருஷ்ணகிரி முருகன் – மனுசனா நீ

கிருஷ்ணகிரி நயன்தாரா – கோலிசோடா டூ

மயிலாடுதுறை கோமதி – ஒரு குப்பைக் கதை

கரூர் எல்லோரா – ஒரு குப்பைக் கதை

ஆரணி சேத்பட் பத்மாவதி – மிஸ்டர் சந்திரமௌலி

கரூர் கவிதாலயா – தொட்ரா

கரூர் கவிதாலயா – ராஜா ரங்குஸ்கி

பெங்களூரு சத்யம் – இமைக்கா நொடிகள்

விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் – சீமராஜா

மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா

 

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ( அதாவது 17 , 18 தேதி) வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்குக் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

Trending

Exit mobile version