கிரிக்கெட்

2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: புதிய அணிகளை வாங்கும் தொழிலதிபர்கள்!

Published

on

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது என்பதும் 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டில் தற்போது உள்ள எட்டு அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என்றும் கூடுதலாக இரண்டு அணிகளுக்கான டெண்டர் வரும் ஆகஸ்ட் மாதம் கோர இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

இந்த டெண்டர்கள் பிசிசிஐ முன்பு பரிசீலிக்கப்பட்டு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் புதிய அணிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் புதிய அணிகளை வாங்குவதற்காக கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா குழுமம், அகமதாபாத்தைச் சேர்ந்த அதானி குழுமம் ஐதராபாத்தை சேர்ந்த அரவிந்த் பார்மா குழுமம், குஜராத்தை சேர்ந்த டொரெண்ட் குழுமம் ஆகியவை ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான ஏலம் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிகளை நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 இந்திய வீரர், 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை 90 கோடியாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது

author avatar
seithichurul

Trending

Exit mobile version