உலகம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. இன்று மசோதா தாக்கல்!

Published

on

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை இன்று மத்திய பாஜக அரசு லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை உலுக்கும் அறிவிப்பு ஒன்றை மத்திய பாஜக அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க முடிவு எடுத்து இருப்பதாக கூறப்பட்டது.

இதுவரை நாடு முழுக்க 49.5 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது (தமிழகம் தவிர்த்து). இந்த நிலையில் கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முழுக்க முழுக்க உயர் சாதியினர், ஏற்கனவே நல்ல பணிகளில் இருக்கும் நபர்கள் மேலும் பயன் பெரும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மொத்தம் 19 கோடி உயர் சாதியினர் இதனால் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. இது பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் பட்டியலின சாதியினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

seithichurul

Trending

Exit mobile version