ஆரோக்கியம்

10 நிமிடங்களில் சுவையான உருளைக்கிழங்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்!

Published

on

இன்றைய ஸ்பெஷல் – வீட்டில் இருக்கும் இட்லி மாவுல இருந்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிஸ்பியான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு இட்லி மாவு ஸ்நாக்ஸ்
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1
இட்லி மாவு – 1 கப்
வர மிளகாய் – 3
பூண்டு – 4
சோம்பு – 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
அரிசி மாவு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • உருளைக்கிழங்கை தோலுரித்து நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
  • வர மிளகாயை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 1 ஸ்பூன் உப்பு மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, முக்கால் வாசி வெந்ததும்
  • அடுப்பை அணைத்து, நீரை வடிகட்டி, உருளைக்கிழங்கை ஆற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்த வர மிளகாய், பூண்டு, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையையும் சேர்த்து கலக்கவும்.
  • தேவைப்பட்டால், அரிசி மாவு சேர்த்து, கெட்டியான மாவு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, உருளைக்கிழங்கு துண்டுகளை தயாரித்த மாவில் முக்கி, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி!

குறிப்புகள்:

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, மசாலாப் பொருட்களின் அளவை மாற்றிக் கொள்ளலாம். ஸ்நாக்ஸை  காரமாக வேண்டுமானால், மிளகாய் சேர்க்கலாம். பொரித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸை டிஷ்யூ பேப்பரில் வைத்து, அதிகப்படியான எண்ணெயை நீக்கலாம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

 

 

Trending

Exit mobile version