உலகம்

டிட்லி புயல்: ஒடிசாவிற்கு ரெட் அலெர்ட்.. 10 லட்சம் பேர் வெளியேற்றம்!

Published

on

புவனேஷ்வர்: டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் டிட்லி புயல் மிகவும் மோசமான புயலாக உருவெடுத்து உள்ளது.

125 கி.மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இந்த புயல் காரணமாக இன்று ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஒடிசா மற்றும் ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது மீட்பு படையினர் முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

5000 மீட்பு படை வீரர்கள் இரண்டு மாநிலங்களிலும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் தற்போது ஒடிசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பான மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று இன்னும் சில மக்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.

 

 

 

Trending

Exit mobile version