இந்தியா

சுதந்திரத்திற்கு பின் 10% உயர்ந்த பால் உற்பத்தி: அமித் ஷா தகவல்!

Published

on

நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நேற்று, தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று அமித் ஷா பேசியது வைரல் ஆகியுள்ளது.

பால் உற்பத்தி

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் 49 வது பால் தொழில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பால் பதப்படுத்தும் திறனானது நாள் ஒன்றுக்கு சுமார் 126 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. இது தான் உலகிலேயே மிகவும் அதிகம். நாட்டின் வளர்ச்சிக்காக பால் பண்ணைத் துறையும் அதிகமாக உழைத்துள்ளது. இதில் கார்ப்பரேட் பால் பண்ணையின் பங்களிப்பு மிகப் பெரியது.

இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக பால் துறை விளங்குகிறது. பால் துறையின் பங்களிப்பானது சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 45 கோடி மக்கள் இதனுடன் தொடர்புடையவர்கள் ஆவர் என அமித் ஷா கூறினார்.

பால் உற்பத்தி அதிகரித்து இருந்தாலும், பால் துறை வளர்ச்சிக்காக உழைத்த பால் உற்பத்தியாளர் சங்கங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியதும் அரசின் கடமையாகும். அவ்வகையில், பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version