தமிழ்நாடு

அரசு பள்ளியில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்: அலறியடித்து ஓடிய மாணவர்கள்!

Published

on

திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளதை அடுத்து மாணவர்கள் அலறி அடித்து ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் திடீர் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பள்ளி கட்டிடங்களில் சுவர் அரிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கட்டிடம் சிதலமடைந்து தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கனமழை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறந்த ஒரு சில மணி நேரத்தில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் பீதி அடைந்த மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு அலறி அடித்து ஓடிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், இது குறித்து மேலதிகாரிகளுக்கு தலைமையாசிரியர் தகவல் தகவல் தெரிவித்ததாகவும், உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி கட்டடத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று மாடி கொண்ட இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் இருப்பதால் பள்ளி கட்டிடத்தை சீரமைக்கும் வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version