வேலைவாய்ப்பு

10,+2வகுப்பு முடித்தவர்களா நீங்கள் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்! இளநிலை ஆய்வாளர்

Published

on

கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிகான காலியிடங்கள் 30 உள்ளது. இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் நவம்பர் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

வேலை: இளநிலை ஆய்வாளர்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மாதம் சம்பளம்: ரூ.20,600 – ரூ.65,500

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019

தேர்வுக் கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.150 மற்றும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாவும் செலுத்தலாம். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலும் முழு விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 21.11.2018

 

seithichurul

Trending

Exit mobile version