இந்தியா

ஒரே நிமிடத்தில் ஒரு திரைப்படம் டவுன்லோடு: 5ஜி பரிசோதனையில் ஏர்டெல்!

Published

on

ஒரே நிமிடத்தில் ஒரு முழு திரைப்படமும் டவுன்லோட் செய்யும் வகையில் 1Gbps வேகத்தில் 5ஜி சோதனையில் ஏர்டெல் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியாவிலுள்ள டெலிகாம் நிறுவனங்களில் முன்ன்ணி நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல் என்பதும் இந்நிறுவனம் 5ஜி பரிசோதனையை துவக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி பரிசோதனையை மேற்கொண்ட போது 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாகவும் இதன் மூலம் ஒரே நிமிடத்திற்குள் ஒரு முழு திரைப்படத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த விளம்பரத்தையும் ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையைவிட மிக நவீன தொழில்நுட்பத்தையும் பன்மடங்கு வேகத்தையும் பெற்றுள்ளதை அடுத்து அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

முதன்முதலாக செல்போன் அறிமுகமான போது 1ஜி சேவை தான் இருந்தது. அதில் கால் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அதனை அடுத்து 2ஜி சேவையில் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும் பின்னர் வந்த 3ஜி சேவையில் கால் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்எம்எஸ் ஆகியவையும் பயன்படுத்த முடிந்தது. இதன் பின்னர் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையானது சிறந்த இன்டர்நெட் வேகத்தை கொடுப்பதோடு வீடியோ கால் அழைப்புகளுக்கும் உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அடுத்த தலைமுறைக்கான 5ஜி சேவை 4ஜி சேவையை விட பலமடங்கு வேகம் இருப்பதோடு மிக விரைவாக டவுன்லோட் வேகமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முழு திரைப்படத்தை டவுன்லோட் செய்ய 4ஜியில் 8 நிமிடங்கள் ஆகும் என்றால் 5ஜியில் ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே டவுன்லோட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 5ஜி சேவை மிக விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து வருங்கால சந்ததியினருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version