சினிமா செய்திகள்

ஹாலிவுட் செல்கிறான் ராட்சசன்!

Published

on

ஹாலிவுட் சினிமாவை பார்த்து இன்ஸ்பிரேஷன் அடைந்தோ அல்லது காப்பியடித்தோ பல இந்திய சினிமாக்கள் உருவாகியுள்ளன.

முதன்முறையாக, தமிழ் சினிமா ஒன்று ஹாலிவுட்டில் ரீமேக்காக போகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் தான் அது. இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன், ஹாலிவுட் சைக்கோ த்ரில்லர் படங்களையே மிஞ்சும் அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படத்தை பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க கோரியுள்ளதாக இயக்குநர் ராம்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கமலின் ஆளவந்தான் படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டும் குவெண்டின் டரண்டினோவின் ஹாலிவுட் படமான கில் பில் படத்தில் எடுத்தாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version