சினிமா

விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் பெயர் தெரியுமா?

Published

on

சிவா – அஜித் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், இதுவரை ஒரு சிங்கிள் டிராக் அல்லது டீஸரோ வெளியாகவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் மிகவும் விரக்தியில் உள்ளனர்.

அதே நாளில் வெளியாக உள்ள சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் மற்றும் ரஜினியின் பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் பாடலான மரண மாஸ் வெளியாகி ஹிட்டடித்துள்ளன.

இந்நிலையில், பில்லா, ஆரம்பம், ஏகன் படங்களை தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நடிகை நயன்தாராவின் கதாபாத்திர பெயர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நிரஞ்சனா என்ற கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி அதிக விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version