சினிமா செய்திகள்

வர்மா டிரைலரை வெளியிட்ட சூர்யா!

Published

on

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படம் அதில், நடித்திருந்த விக்ரம், சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், அந்த நட்பின் காரணமாக பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தெலுங்கில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வர்மா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த நாயகன் ரோலில் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ஷாலினி பாண்டே நடித்திருந்த ரோலில் வடமாநில நடிகை மேகா நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் புகழ் ரைஸா வில்சன், காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்த ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அடுத்த மாதம் காதலர் தின பரிசாக இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version