தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் தொகுதி இதுதானாம்!

Published

on

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்கழி சனிக்கிழமை தினமான இன்று, பெருமாளை வழிபட்ட பிறகு, சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தனது சூளுரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

முன்னதாக எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் வந்த நிலையில், தற்போது தாய் தொகுதியை விட்டுக்கொடுக்கவும் மனமில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தான் எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். பொதுவாக தாய் தொகுதி, தாய் நகரில் இருந்து தொடங்கும் எந்தவொரு நல்ல காரியமும் வெற்றி பெறும் என்று கூறுவார்கள்.

இதனால் தான் திமுக ஸ்டாலின் முதல் மக்கள் நீதி மய்யம் கமல், அதிமுக பழனிசாமி என அனைவரும் தங்களது தாய் தொகுதியில் தான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version